Friday 26th of April 2024 03:39:37 AM GMT

LANGUAGE - TAMIL
இன்றும் இருவர்
கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாம்; தொற்று எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு! (2ம் இணைப்பு)

கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாம்; தொற்று எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு! (2ம் இணைப்பு)


முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கேப்பாபுலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 2 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) அறிவிக்கப்பட்டுள்ளது.

(2ம் இணைப்பு)

முல்லைத்தீவு கேப்பாவிலவு விமாப்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த மேலும் இரண்டு கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (மே-23) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மூன்று நாட்களில், முல்லைத்தீவு கேப்பாப்புலவு, விமானப்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த கடற்படையினரில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன் தினம் (மே-21) இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (மே-22) அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் 2 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று (மே-23) அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று இருப்பதாக இன்று இனங்காணப்பட்ட 2 கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு இன்றைய தினம்(மே-23) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தலுக்காக வெலிசறையிலிருந்து கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அண்மையில் 400 கடற்படையினர் கொண்டுவரப்பட்டனர்.

அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களில் 99 பேருக்கு கடந்த 19ஆம் திகதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம்(மே-21)அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் நேற்று முந்தினமே வெலிகந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று (மே-22) கொரோனா தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட மேலும் ஆறு பேரும் வெலிகந்த மருத்துவமனைக்கு நேற்று (மே-22)அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று தொற்றுக்குள்ளானதாக உறுதிசெய்யப்பட்டிருந்த இருவரையும் இன்று வெலிகந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், வெலிசறையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஏனைய கடற்படையினரில் 40 பேருக்கான பரிசோதனைகள் நேற்று (மே-22) இடம்பெற்றதகவும் ஏனைய கடற்படையினரில் 35 பேருக்கான பரிசோதனைகள் இன்று (மே-23) இடம்பெறுவதாகவும் ஏனையவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னைய செய்தி...

நேற்று முன்தினம் இருவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று ஆறு பேர் அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்று இருவர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளானதாக அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் வெலிக்கந்தையில் உள்ள தொற்றுநோயியில் தடுப்பு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE