Friday 26th of April 2024 08:35:11 PM GMT

LANGUAGE - TAMIL
-
இளைஞர் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்; முடங்கியது ஏ-09 வீதி! (2ஆம் இணைப்பு)

இளைஞர் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்; முடங்கியது ஏ-09 வீதி! (2ஆம் இணைப்பு)


இரண்டாம் இணைப்பு

துப்பாக்கிப்பிரயோகத் தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுப்பதாக இராணுவத்தினர் வாக்குறுதி வழங்கிய நிலையில் ஏ-09 போராட்டம் முடிவுக்கு வந்திருக்கின்றது.

முன்னைய இணைப்பு :

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிளாலியில் இளைஞர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி ஏ-09 நெடுஞ்சாலையை முடக்கி பளையில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்று மாலை 5 மணியளவில் மணல் ஏற்றுவதற்காக உழவியந்திரத்தின் பெட்டியில் அமர்ந்து சென்றுகொண்டிருந்த இளைஞர் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்.

சம்பவத்தை அடுத்து அவர் படுகாயம் அடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட பளை வைத்தியசாலை வளாகத்தில் திரண்ட உறவினர்களும் மக்களும் இராணுவத்தினருக்கு எதிராக குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இளைஞருடன் சென்றபோது படையினரால் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞர்கள் மூவரும் எங்கே? சுட்டுக்கொன்ற இராணுவத்தினரை அங்கு அழைத்துவரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதேவேளை சிறப்பு அதிரடிப்படையினரும் அங்கு விரைந்திருக்கின்றனர். வாகனங்கள் போக்குவரத்துக்களில் ஈடுபடமுடியாத அளவிற்கு பாதை முற்றாக வழி மறிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE