Friday 26th of April 2024 06:33:57 AM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னார்-புனித லூசியா ம.வி பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டம்!

மன்னார்-புனித லூசியா ம.வி பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!


மன்னார் பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அப்பாடசாலையின் அதிபரை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறித்த அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரி குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோரும் இன்றைய தினம் புதன் கிழமை (02) காலை பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அப்பாடசாலையின் அதிபர் எஸ்.கே.பிகிராடோ அவர்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

-இந்த நிலையில் இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரி பள்ளிமுனை கிராமம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

-எனினும் அதிபரின் இடமாற்றத்திற்கு துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.இந்த நிலையில் பாடசாலை அதிபரின் இடமாற்றத்தை கண்டித்தும், குறித்த அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்றைய தினம் புதன் கிழமை காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

-இந்த நிலையில் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ஜே.பிரட்லி பாடசாலைக்கு சமூகமளித்து பெற்றோருடன் கலந்துரையாடினார்.இதன் போது மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன்,மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜாட்சன் பிகிராடோ,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியார் பாடசாலைக்குச் சென்று பெற்றோருடன் கலந்துரையாடினர்.

இதன் போது குறித்த பாடசாலை வளர்ச்சியில் கூடிய கவனம் செலுத்தி பாடசாலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் இப்பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எனவே அதிபரை தொடர்ந்தும் இப்பாடசாலையில் கடமையாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.எனவே அதிபரின் இடமாற்றம் உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதன் போது உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும்,பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிபரின் இடமாற்றத்தை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ஜே.பிரட்லி உறுதியளித்தார். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத் கைவிடப்பட்ட நிலையில் மாணவர்கள் பாடசாலைக்குச் சென்ற நிலையில் கற்றல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT
MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE