Friday 26th of April 2024 03:58:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டக்களப்பு - பன்குடாவெளியில்கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு - பன்குடாவெளியில்கவனயீர்ப்பு போராட்டம்!


மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கியதைக் கண்டித்தும் தமிழர் பாரம்பரிய காணிகளை புராதன பூமி என்ற பெயரில் கையகப்படுத்துவதை நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு - பன்குடாவெளியில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

பிரதேச மக்களினால் செவ்வாய்கிழமை (22) ஏற்பாடு செய்யபட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல்வாதிகள் விவசாயிகள் பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இன நல்லுறவிற்கு பாதகம் ஏற்படும் வகையில் செயற்படும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும், அரச அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பொலிஸார் கடமையினை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என கோசமிட்டு பதாதைகளை ஏந்தி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையளப்படுத்தபட்ட காணியின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சும்பவம் தொடர்பாக தெரியவருவதாவது - ஞானமுத்து அன்னபூரணம் என்பவருக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் வயற்காணியை 1964ஆம் ஆண்டு அவரது மருமகள்களான தருமலிங்கம் ராணியம்மா, தருமலிங்கம் யோகமலர், தருமலிங்கம் பரமேஸ்வரி ஆகியோருக்கு நன்கொடையாக வழங்கபட்டு அவர்களினால் அன்று முதல் விவசாயம் செய்கை பண்ணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் குறித்த பகுதியில் புராதன சிங்கள பௌத்த சின்னங்கள் பௌத்த விகாரை இருந்ததாகவும் கூறி அப்பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலையினை உருவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு தொல்பொருள் அடையாளங்கள் காணப்பட்ட பகுதியில் மாத்திரம் அடையாளமிடப்பட்டு மிகுதி பகுதியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை (21) மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் குறித்த இடத்திற்கு வந்து விகாரைக்குரிய காணி 200 ஏக்கர் உள்ளது காணிக்கு உரிமை கோருவேர் விவசாயம் செய்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் மிரட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வருமாறு அழைத்து அங்கு வந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரை கடுமையாக தாக்கி தகரக் கொட்டில் ஒன்றிற்குள் சிறைப்பிடித்து வைத்திருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தேரருடன் கலந்துரையாடி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டுள்ளனர்.

தினமும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரரின் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்யும் அத்துமீறல்களைக் கண்டித்தும் அதிகாரிகளுக்கு தாக்கியதற்காக சட்ட நடவடிக்கையெடுக்க கோரியும் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

குறித்த இடத்திற்கு நில அளவை திணக்கள அதிகாரிகள் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள் கிராம சேவை அதிகாரி சகிதம் சென்று பார்வையிட்டு சென்றனர்.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE