Wednesday 8th of May 2024 01:06:12 PM GMT

LANGUAGE - TAMIL
.
மட்டு. மாநகரசபை; பொதுமக்கள் பங்கேற்பில் 2021 பாதீடு தயாரிப்பு கலந்துரையாடல்!

மட்டு. மாநகரசபை; பொதுமக்கள் பங்கேற்பில் 2021 பாதீடு தயாரிப்பு கலந்துரையாடல்!


மட்டக்களப்பு மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட வரைபு தாயரிக்கும் வகையில் கலந்துரையாடல் பொதுமக்கள் தரப்பினரது பங்கேற்பில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட வரைபினை தயாரிப்பதற்கான, வரியிறுப்பாளர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுடனான கலந்துரையாடலானது மாநகர முதல்வரும், நிதிக்குழுவின் தலைவருமான தியாகராஜா சரவணபவன் தலைமையில் நேற்று (20) செவ்வாய்க்கிழமை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, பிரதம கணக்காளர் திருமதி ஹெலன் சிவராஜா, மாநகர நிதி நிலையியற்குழுவின் அங்கத்தவர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக நடைமுறையில் உள்ள பாதீட்டில் மூலமாக நிறைவுறுத்தப்பட்டுள்ள வேலைகள் , நிலுவை வேலைகள் தொடர்பிலும், கொரொனா நோய் தாக்கத்தின் காரணமாக எதிர்பார்க்கை வருமான இழப்புகள் தொடர்பிலும் மாநகர முதல்வரால் சபையோருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் 2021ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டதுடன். எதிர்வரும் ஆண்டுக்கான முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

மேற்படி கருத்து பதிவுகளுடன் வரவு செலவுத் திட்ட வரைவு அறிக்கையானது எதிர்வரும் மார்கழி மாதமளவில் மாநகர சபையின் விசேட பொது அமர்வில் சபைக்கு சமர்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE