Sunday 28th of April 2024 10:04:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
புரேவி புயல்: இரணைதீவில் 131 பேர் சிக்கித்தவிப்பு! - உதவிக்கு இராணுவத்தை அழைக்க திட்டம்!

புரேவி புயல்: இரணைதீவில் 131 பேர் சிக்கித்தவிப்பு! - உதவிக்கு இராணுவத்தை அழைக்க திட்டம்!


தொழில் நிமித்தமாக இரணைதீவுக்கு சென்றிருந்த 131 பேர் கரை திரும்பமுடியாது சிக்கித்தவித்து வருகின்றனர்.

கிளிநொச்சி பூநகரி இரணைதீவு பகுதியில் 131பேர் இரண்டு இடங்களிலே தங்கியிருப்பதாகவும். அவர்களிற்க உடனடி உதவி பொருட்களை வழங்க விமானப்படையின் உதவியை கோரவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மழை மற்றும் காற்று என்பவற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் இன்றுபிற்பகல் 2 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்இடம்பெற்றது. குறித்த சந்திப்பை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பின்புாது,

கிளிநொச்சி மாவட்டத்திலே 455 குடும்பங்களை சேர்ந்த 1342பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தற்காலிக வீடு ஒன்று முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 135 வீடுகள் பகுதி அளவிலே சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களிற்கான தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தனித் தீவாக காணப்படுகின்ற இரணைதீவு பகுதியில் குடியேறி வாழ்ந்துவரும் மற்றும் தொழிலின் நிமித்தம் சென்று தங்கியிருப்போருமாக 88 குடும்பங்களை சேர்ந்த 131பேர் அங்கு இரு வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.

அவர்களது தேவைகள் தொடர்பிலும் பிரதேச செயலாளரார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான உடனடி அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான கடல்வழி போக்குவரத்துக்கள் எதுவும் இல்லாத நிலையில் நிலமை நீடிக்குமாக இருந்தால் விமானப்படையினரின் உதவியை கோரி அதவர்கள் ஊடாக உடனடி அத்தியாவசிய பொருட்களை வழங்க கூடியதாக இருக்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான சூழலில் கொவிட் 19 தொற்று தொடர்பிலும் மக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள், நீர்பாசன பொறியியலாளர்க், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச சபை செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE