Friday 3rd of May 2024 02:55:57 PM GMT

LANGUAGE - TAMIL
-
நினைவுத்தூபி உடைக்கப்பட்டது ஏன்? - துணைவேந்தர் விளக்கம்!

நினைவுத்தூபி உடைக்கப்பட்டது ஏன்? - துணைவேந்தர் விளக்கம்!


இரண்டாம் இணைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்ற தவறி இருந்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்படும் ஏனைய பொங்குதமிழ் தூபி மற்றும் மாவீரர் நினைவாலயம் என்பன நிர்மூலமாக்கப் பட்டிருக்கும் எனவே இதனை தடுக்கும் முகமாகவே நான் எமது நிர்வாகத்தினரின் உதவியுடன் நேற்றிரவு அனுமதி இல்லாது அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் தூபியினை அகற்றியிருந்தேன் என்று யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா இன்று காலை தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக் கழகம் என்பது அரசாங்கத்தினுடைய சொத்து எனவே அரசாங்கத்தினுடைய சுற்று நிரூபங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது துணைவேந்தர் ஆகிய எனது கடமை அதன் அடிப்படையிலேயே நான் இந்த தூபியினை இடித்து அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது ஏனெனில் குறித்த தூபி அமைப்பதற்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை

எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் அடிப்படையில் அனுமதி இல்லாத கட்டடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவித்தல் வழங்கப்பட்டதன் அடிப்படையிலேயே நான் அதனை அகற்றியிருந்தேன். அனுமதி இல்லாமல் அது அமைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் அவர்கள் எந்த தலையீடும் செய்யவேண்டாம் என்ற வேண்டுகோளின் அடிப்படையிலேயே நான் இதனை செய்திருந்தேன்.

அதனை அகற்ற தவறி இருந்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்படும் ஏனைய பொங்குதமிழ் தூபி மற்றும் மாவீரர் நினைவாலயம் என்பன நிர்மூலமாக்கப் பட்டிருக்கும் எனவே இதனை தடுக்கும் முகமாகவே நான் எமது நிர்வாகத்தினரின் உதவியுடன் நேற்றிரவு அனுமதி இல்லாது அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் தூபியினை அகற்றியிருந்தேன் என விளக்கம் அளித்துள்ளார்.

முன்னைய இணைப்பு - 08 -01 2021 இரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் சற்று முன்னர் இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என்று யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா சற்று முன்னர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே இந்த முடிவுக்கு செல்ல நேர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

குறித்த தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்றுவதற்கான தொடர்ச்சியான அழுத்தம் தம்மீது பிரயோக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்காவிட்டிருந்தால் வேறு தரப்புக்கள் உள் நுழைந்து அதனை அகற்றியிருக்கக்கூடும் என்பதாலும் அவ்வாறு நடைபெறுவது பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல என்பதாலுமே தாம் இவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE