Friday 26th of April 2024 08:48:30 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஏப்ரல்21 தற்கொலைக் குண்டுதாரி உடல் புதைப்பு விவகாரம்: வியாழேந்திரன் நீதிமன்றில் முன்னிலை!

ஏப்ரல்21 தற்கொலைக் குண்டுதாரி உடல் புதைப்பு விவகாரம்: வியாழேந்திரன் நீதிமன்றில் முன்னிலை!


தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்தற்கு எதிராக பொதுமக்களடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தபோது எங்களை தாக்கிய பொலிசார் எம் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்துமயானத்தில் புதைத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்தின் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று திங்கட்கிழமை (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுக்கப்பட்டது, இதில் அமைச்சர் உள்ளிட்ட 5 பேரும் ஆஜராயினர் இதன்போது வழக்கு எதிர்வரும் பெப்பிரவரி 9ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

இதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஏப்பிரல் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பலபேர் உயிரிழந்தனர். அந்த குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சோந்த தற்கொலை குண்டுதாரியான ஆசாத்தின் உடற்பாகத்தை கள்ளியன்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்தனர்.

இந்துமயானத்தில் எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்த பயங்கரவாதியை புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் அவ்விடம் சென்று புதைக்கப்பட்ட அந்த உடற்பாகத்தை தோண்டி எடுத்குமாறு மக்களுடன் சேர்ந்து குரல் கொடுத்தவேளை பொலிசர் அதில் கலந்து கொண்ட பெண்களைக் கூட பாராது மிக மோசமாக பலமாக தாக்கினார்கள்.

அந்த அடிப்படையில் செல்வி மனோகரன், அனோஜன், சுசிலா, றொஸ்மன் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்டவர்கள் மீதும் என்னையும் சேர்த்து மொத்தமாக 5 பேருக்கு எதிராக பொலிசார் வழக்கு தாக்குதல் செய்தனர்.

இருந்தும் மக்கள் போராட்டம் வெற்றி பெற்றது. அந்த போராட்டதின் பிற்பாடு நீதிமன்றம் புதைக்கப்பட்ட உடற்பாகத்தை தோண்டி எடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் புதைத்தது ஆனால் அந்த போராட்டத்தில் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதனால் தொடர்சியாக நீதிமன்றத்திற்கு வழக்கிற்கு வந்து செல்கின்றோம்.

அதேவேளை பொலிசாரினால் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். எது எவ்வாறாயினும் நீதி தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE