Friday 26th of April 2024 12:21:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
கிளி. புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா: 100 பேருக்கே பங்கேற்க அனுமதி!

கிளி. புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா: 100 பேருக்கே பங்கேற்க அனுமதி!


கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவிற்கு வெளிமாவட்டத்திலிருந்து வருகைதரும் பக்தர்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் கொவிட் 19 பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த கண்டாவளை பிரதேச செயலகம் இவ்விடயத்தினை இன்று அறிவித்துள்ளது.

குறிதத் விடயம் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் தெரிவிக்கையில்,

யாழ்மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கொவிட் 19 தொற்று அதகரித்த காணப்படுகின்றது. இந்த நிலையில் எமது பிரதேசத்தில் உள்ள பரசித்தி பெற்ற புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது.

அரசாங்க அதிபரின் பணிப்பிற்கு அமைவாக நாளைய தினம் குறித்த பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அவசர அவசரமான தீர்மானங்கள் சிலவற்றை எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பிரதேச செயலகம் ஆகியன கலந்துரையாடி சில தீர்மானங்கள் இன்று எடுக்கப்பட்டுள்ளது,

அதற்கு அமைவாக குறித்த பொங்கல் நிகழ்விற்கு வெளிமாவட்டங்களிலிருந்து எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், 100 பேருக்கு குறைவானவர்களே பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கோவில் நிர்வாகத்தினர் பொறுப்புடன் செயற்படுவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும், அறிவுறுத்தலிற்கு அமைவாக் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் காணப்படும் கொவிட் 19 பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறித் ஆலய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறும், பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வருடா்த பொங்கல் உட்சவம் தொடர்பில் புளியம்பொக்கனை ஆலய நிர்வாகத்தினரும் பொறுப்பறிந்து செயற்படுமாறு்ம, எடு்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE