Friday 26th of April 2024 02:32:59 PM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டு. கோறளைப்பற்று கிண்ணையடியில்  மீன் பண்ணை,  மணல் அகழ்வை தடை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

மட்டு. கோறளைப்பற்று கிண்ணையடியில் மீன் பண்ணை, மணல் அகழ்வை தடை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!


மட்டக்களப்பு கிண்ணையடி பிராதான வீதியில் இருந்து ஆரம்பமான போராட்டம் பேரணியாக நகர்ந்து பிரதேச செயலகத்தினை வந்தடைந்தது. ஊர்வலத்தில் வந்தோர் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு பிரதான வீதி வழியாக வாழைச்சேனையை வந்தடைந்தனர்.

அங்கு கூடியவர்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நின்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது மீன்வளர்ப்பு திட்டதை ரத்துச் செய்,எமது மண் எமக்கு வேண்டும். அள்ளாதே அள்ளாதே மணலை அள்ளாதே, என்ற கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் பிரதேச செயலக வளவினுள் சென்று கோஷங்களை எழுப்பினர். ஊதவி பிரதேச செயலாளரிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை சமர்ப்பித்தனர்.

மகஜரைப் பெற்றுக்கொண்ட உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிரிந்தன் தங்களது கோரிக்கை தொடர்பான விடயத்தினை தமது மேலதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தங்களது போராட்டம் தொடர்சியாக இடம்பெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கிண்ணையடி கிராமத்தில் வில்லுக் குளம் ஊடாகவும் தனியார் காணி ஊடாகவும் மீன் பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மீன் அமைக்கும் போர்வையில் தங்களது கிராமத்து மண் வளங்கள் எண்ணிக்கையில்லாமல் வெளி மாவட்டங்களுக்கு இரவோடு இரவாக கனரக வாகனங்களில் அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் இதனை கருத்தில் கொண்டு மீன் பண்ணை அமைக்கும் திட்டத்தினை ரத்து செய்து தருமாறு பிரதேச மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE