Friday 26th of April 2024 06:32:48 PM GMT

LANGUAGE - TAMIL
.
சர்வதேச நாடுகளின் உறவுநிலையில் இருந்து விலக்கிவைக்கும் நிலையை நோக்கி இலங்கை அரசின் போக்கு!

சர்வதேச நாடுகளின் உறவுநிலையில் இருந்து விலக்கிவைக்கும் நிலையை நோக்கி இலங்கை அரசின் போக்கு!


இலங்கை அரசாங்கத்தின் போக்குகள் சர்வதேச நாடுகளின் உறவுநிலையில் இருந்து விலக்கிவைக்கும் நிலையைநோக்கி நகர்ந்து செல்கின்றது இதனை உணராமல் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மனங்களை உதறிதள்ளுகின்ற செயற்பாடுகளை செய்து வருகின்றது. இது இலங்கைக்கு நல்லதல்ல. இது தொடர்பில் பல வல்லுனர்கள் உள்ளுர் வெளியூர் மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையின் செயற்பாட்டிற்கு கண்டனங்களை தெரித்து வருகின்றார்கள்.

ஏற்கனவே கொவிட்19 தாக்கத்தினால் பொருளாதார இழப்புகள் அதிகரிக்கும் நிலையில் பல தொழில் நிறுவனங்கள் முடப்படும் சந்தர்ப்பங்கள் வேலைவாய்பு இல்லாமல் போகும் நிலைகள் என பல இழப்புக்களை சந்தித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத நிலையில் அழிவுபாதையை நோக்கி இந்த அரசு செல்கிறது.

இந்த அரசாங்கம் நாட்டு மக்கள் எத்தகைய நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியாது செயற்படுகிறது. இத்தகைய போக்கு சர்வதேச நாடுகள், வெளிநாட்டு சத்திகளிடம் இருந்து ஒதுக்கப்படுகின்ற அந்றியப்படுகின்ற நிலைதான் காணப்படுகின்றது.

இத்த அரசங்கம் இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினை தீர்விற்கோ காணமல் ஆக்கப்படோர் தொடர்பாகவோ, காணிகள் விடுவிப்பு தொடர்பிலோ யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முன்னேற்றுவதற்கோ திட்டங்களை வகுக்க முடியாதவர்களாக பொருளாதார ரீதியிலான முன்னேற்றங்களை கூட செய்ய முடியாதவர்களாக இந்த ஆட்சியாளர்கள் இருக்கின்றர்கள்.

இது ஐனநாயகமற்ற நாடாக மாறுகின்ற நிலை காணப்படுகிறது. அது மட்டுமன்றி சர்வதாதிகார போக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நிலையை கொண்டுவருகின்றது. ஆட்சிபிடம் ஏறியது முதல்கொண்டு நிர்வாகத்திற்குள் இராணுவ அதிகாரிகளை நியமித்து வருகிறார்கள். இது வடக்கு கிழக்கு மட்டுமன்றி எனைய நிர்வாகத்திலும் மாவட்டங்களிலும் இடம்பெற்று வருகின்றது.

இது தமிழ்மக்களுக்கு மட்டுமன்றி ஐனநாயகத்தை விரும்புகின்ற மக்களுக்கும் பாதிப்புகளை ஆபத்துகளை ஏற்படுத்தும் நிலை காணப்படுகின்றது.

அரசாங்கத்தின் தற்போதைய நிலமைகளை எமது மக்கள் அவதானத்துடன் பார்க்க வேண்டும். எது நடந்தாலும் எமது மக்களை இலக்கு வைக்கின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்துவருகிறது.

நாங்கள் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டிக்கின்றோம். அது மட்டுமன்றி ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட நாடுகளும் நடுநிலை வகித்த நாடுகளும் அந்த அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த வேளையில் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: மாவை சோ.சேனாதிராஜா, இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE