Thursday 25th of April 2024 09:55:02 PM GMT

LANGUAGE - TAMIL
.
திருமலை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்! - டக்ளஸின் இணைப்புச் செயலாளர் உறுதி!

திருமலை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்! - டக்ளஸின் இணைப்புச் செயலாளர் உறுதி!


திருகோணமலையில் கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் டக்ளஸின் இணைப்புச் செயலாளர் ஸ்டாலின் உறுதி கூறியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

திருகோணமலையில் கடற்றொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதில் சுருக்கு வலை பயன்படுத்துவோரின் சட்டவிரோத செயற்பாடுகள், அலங்கார மீன்பிடிப்போர் தமது தொழிலை செய்ய முடியாமலிருப்பது, தொழில் உபகரணங்கள் இல்லாமை மற்றும் பாரம்பரியமான தமது கரைவலைப்பாடுகளை மீண்டும் அந்தந்த இடங்களில் செய்ய முடியாமை போன்ற பிரச்சனைகள் இருக்குன்றன.

இவற்றுக்கான தீர்வுகளை எமது தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரைவில் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையை உங்களுக்கு உறுதி மொழியாகவே வழங்குகின்றேன் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்புச் செயலாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருகோணமலையிலுள்ள மீன்பிடித் திணைக்களத்தில் இன்று(16.07.2021) இடம்பெற்ற கடற்றொழிலாளர்களுக்கு ஐஸ் பெட்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஐஸ் பெட்டிகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மாவட்டத்தின் பிரதேசங்களில் வாழும் கடற்றொழிலாளர்கள் தாம் பிடிக்கும் மீன்களை உடனடியாக சந்தைக்கு கொண்டுவர முடியாமல் போவதால் அந்த மீன்கள் பழுதடைந்து விடுகின்ற நிலை ஏற்படுகின்றது.

அதுபோல் சிறிய படகு உரிமையாளர்கள் கடலில் மீன்களை பழுதுபடாமல் பாதுகாக்க இந்தப் பெட்டிகள் பயனுள்ளதாக அமையும் அதற்காகவே இவ்வாறு ஐஸ் பெட்டிகளை கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை எமது அமைச்சர் ஊக்கப்படுத்தினார்.

அத்திட்டத்தின் முதற்கட்டமாக இந்தப் பெட்டிகள் வழங்கப்படுகின்றது மேலும் 200 பெட்டிகளை திருமலைக்கு பெற்றுக்கொள்ள கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. சேனாரட்ன அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

விரைவில் அதையும் பெற்றுக்கொடுக்க நாம் முயற்சி செய்வோம்.

தவிரவும் பல நாள் மீன்பிடிப்படகுகளை தொழிலாளர்களுக்கு வழங்கி அவர்களின் தொழிலை மேம்படுத்தவும், இந்த மாவட்டத்தில் யுத்தத்தின் போதான இடப்பெயர்வுக்கு முன்னர் கரைவலை தொழிலில் ஈடுபாடு காட்டியவர்களின் இழந்த தொழிலை மீண்டும் பெற்றுக்கொடுக்கவும் தேவையான வழிகாட்டல்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார் என்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருமலை மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் சேனாரத்ன, மாவட்ட மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் சிறீஸ்கந்தராஜா மற்றும் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE