Friday 26th of April 2024 04:19:52 AM GMT

LANGUAGE - TAMIL
-
தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது இவ்வாண்டு நடைபெறமாட்டாது!

தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது இவ்வாண்டு நடைபெறமாட்டாது!


வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது இவ்வாண்டு நடைபெறமாட்டாது என ஆலய பரிபாலனசபையினர் அறிவித்துள்ளனர்.

கொவிட்ட நிலைமை காரணமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பரிபாலசபையினர் தெரிவித்தனர்.

இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் ஊடாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் 15 பணியாளர்களுடன் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த நிலையில் அதன் பின்னர் நடைபெற்ற கோவில் நிர்வாகத்தினரின் கூட்டத்தில் நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமான சுகாதார நிலையினை கருததிற்கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஆலயத்தின் திருவிழாவை நாடாத்துவதில்லையென முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஆலய தலைவரும் வண்ணக்கருமாகிய பூபாலபிள்ளை சுரேந்திரராஜா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் கொரோனா தொற்று காரணமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் கடந்த (08) திகதி ஆலயத்தின் மகோற்சவ பூசைகள் 15 பணியாளர்களை மாத்திரம் அனுமதிக்கப்பட்டு தேரோட்ட பெருவிழா நடைபெறாமல் சாதாரண பூசைகளுடன் நடைபெற இருந்த நிலையில் மேற்படி அறிவிப்பானது ஆலய நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மட்டக்களப்பில் சில ஆலயங்களில் மட்டும் படுத்தப்பட்ட அளவு பக்தர்களுடன் திருவிழாக்கள் நடைபெற்றும் இறுதிக்கட்டத்தில் பக்தர்களின் வருகை அதிகரித்ததனால் ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றம் வரை செல்ல வேண்டியேற்பட்டதனையெல்லாம் எம்மால் கண்டுகொள்ள முடிந்தமையினால் இவ்வாண்டுக்குரிய கிரியைகளுடன் எதிர்வரும் ஆண்டில் ஆலய திருவிழாவினை தான்தோன்றீஸ்வரப்பெருமானின் அருளாசியோடு நடத்துவோம் என இவ் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஆலய செயலாளரும் வண்ணக்கருமாகிய இளையதம்பி சாந்தலிங்கம் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE