Thursday 25th of April 2024 11:16:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
மருத்துவ மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைக்குப் பணித்தது பிரதமர் அலுவலகம்!

மருத்துவ மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைக்குப் பணித்தது பிரதமர் அலுவலகம்!


யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே இரண்டரை மணித்தியாலத்தியாலத்திற்கு முன்பாக   தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான துன்னாலை  வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன்  தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டிலிருந்து மர்மமான முறையில் தூக்கில் தொங்க விடப்பட்டிருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று சடலமாக மீட்கப்பட்டார்.

 இம் மரணம்  தொடர்பில் பொலிஸார் தற்கொலை எனும் ரீதியில் விசாரணைகளை  கிடப்பில் போட்டு இருந்தனர். இச்சம்பவத்தில் மரணமடைந்தமை தெரிய வருவதற்கு முன்பதாக அதாவது இரண்டரை மணித்தியாலங்களுக்கு முன்பதாக  அவர் மரணமடைந்தமை  தொடர்பிலான தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் பொலிசாருக்கு தெரிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இறந்த விடயம் தெரிய வருவதற்கு முன்பாக இறந்தமை தொடர்பில் தகவல் வெளியானமை  தொடர்பில்  விசாரணையை மேற்கொள்ளுமாறும், அது தொடர்பில் பிரதமர் அலுவலகத்திற்கு அறிவிக்குமாறும் பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE