திருகோணமலை வெகுஜன ஒற்றுமை அமைப்பினர் திருகோணமலை எண்ணெய் குதங்களை வெளிநாட்டவருக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களிடம் கையளித்தனர்.
சமயத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த செயற்பாட்டில் களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கபுகொல்லாவே ஆனந்த கீர்த்தி தேரர், திருகோணமலை சீனக்குடா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோஜ் திசானாயக்க மற்றும் பலர் ஒன்றிணைந்து தமது கருத்துக்கள் அடங்கிய மகஜர் ஒன்றினை ஆளுநரிடம் கையளித்தனர்.
திருகோணமலைக்கு சொந்தமான சொத்துக்களை வெளிநாட்டவருக்கு வழங்குவதை திருகோணமலை வாழ் மக்கள் ஒன்று பட்டு எதிர்ப்புத் தெரிவிப்பதாக கருத்து தெரிவித்த அருட்தந்தை அவர்கள் பொதுமக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அல்ல மாறாக முறைகேடான அபிவிருத்தி திட்டங்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை