Saturday 1st of June 2024 03:41:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னாரில் கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி 57 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னாரில் கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி 57 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்!


வடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 57 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை(26) காலை 11 மணியளவில் மன்னார் மாந்தை சந்தி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் மாவட்ட இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில் இடம்பெற்றது.

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு - கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 57 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மேற்படி மன்னாரில் இடம்பெற்றது. இளைஞர்கள், பொது மக்கள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE