விண்ணில் ஏவப்பட்ட ரீசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி-46 ரொக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 5.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கான இறுதிகட்ட பணியான 25 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று அதிகாலை 4.27 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
‘ரீசாட்-2பிஆர்1’ என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை இந்த ரொக்கெட் சுமந்துகொண்டு செல்கிறது.
பேரிடர் மேலாண்மை காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படும் இந்த செயற்கைக்கோள் 615 கிலோ எடை கொண்டதுடன் அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
இதேவேளை விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்துவதுடன் விண்வெளி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக ராக்கெட் ஏவுவதை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
இதற்காக சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் அளவில் ‘கேலரி’ அமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Category: தொழில்நுட்பம், புதிது
Tags: