Sunday 8th of September 2024 07:42:40 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு மேலும் உயர்வு: புதிய அறிக்கை வெளியானது!

இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு மேலும் உயர்வு: புதிய அறிக்கை வெளியானது!


கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி செப்டம்பர் மாத பணவீக்கம் 69.8 வீதமாக ஆக உயர்ந்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 64.3 வீதமாக பதிவானது.

இந்தநிலையில் ஆகஸ்ட் மாதத்தைக்காட்டிலும் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.5 வீத அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

இதேவேளை உணவுப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 93.7 வீதமாக இருந்த நிலையில் செப்டம்பரில் அது 94.9 வீதமாக உயர்ந்துள்ளது.

உணவில்லாப் பொருட்களின் பணவீக்கம், 50.2 வீதத்தில் இருந்து 57.6 வீதமாக உயர்ந்துள்ளது.

மதுபானம் மற்றும் புகைப்பொருட்களின் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 35.6 வீதமாக இருந்த நிலையில், செப்டெம்பர் மாதத்தில் 39.4 ஆக உயர்வடைந்துள்ளது.

ஆடை மற்றும் காலணிகளின் பணவீக்கம் 56.07 இலிருந்து 66 வீதமாக அதிகரித்துள்ளது.

நீர் மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் பணவீக்கம் 21.8 வீதத்திலிருந்து 31.2 வீதமாக அதிகரித்துள்ளது.

சுகாதாரம் தொடர்பிலான பணவீக்கம் 26.4 இலிருந்து 30.7 ஆக அதிகரித்துள்ளது.

போக்குவரத்து பண வீக்கம் 148.6 இலிலிருந்து 150.4 ஆக உயர்வடைந்துள்ளது.

தொலைத்தொடர்புக்கான பணவீக்கம் 7.3 இலிருந்து 23.5 ஆக உயவடைந்துள்ளது.

கல்விக்கான பணவீக்கம் 24 இலிலிருந்து 27.9 ஆக உயர்வடைந்துள்ளது.

விருந்தகங்கள் தொடர்பான பணவீக்கம் 87.8 இலிருந்து 96.6 வீதமாக அதிகரித்துள்ளது.

ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகள் 59.2 இலிருந்து 72.8 ஆக உயர்வடைந்துள்ளது.

வீட்டு பராமரிப்பு தொடர்பான பணவீக்கம் 56.8 இலிருந்து 65.8 ஆக அதிகரித்துள்ளது.

கலாசாரம் தொடர்பான பணவீக்கம் 44 இலிருந்து 52.4 வீதமாக அதிகரித்துள்ளது.

நாட்டில் பணவீக்க அதிகரிப்பானது மேலும் பொருட்கள் சேவைகளின் விலை அதிகரிப்பையே எடுத்து காட்டுகிறது.

அத்தயாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தற்போது மும்மடங்காக அதிகரித்துள்ள நிலையில், மேலும் விலை அதிகரித்தால் மக்களுக்கு கிடைக்கின்ற வருமானம் அதனை ஈடு செய்யாது எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பணவீக்கம் அதிகரித்தமையினால் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் குறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் உலக சந்தையில் எரிபொருள், எரிவாயு, பால்மா, கோதுமை மற்றும் தங்கம் ஆகியனவற்றிற்கான விலை குறைந்தாலும், இலங்கையில் அவை அதிகரிப்பதற்கான சாத்தியங்களே உள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE