அணியை நிர்வகிப்பது இலகுவாக உள்ளதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தசுன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"அணியில் ஒரு பெயருக்காக யாரும் தனித்தனியாக இருக்க முயற்சிக்கவில்லை. ஹசரங்கா, சாமிகா, பானுக ஐபிஎல்லில் விளையாடியுள்ளனர், மற்ற அனைத்து லீக்களிலும் விளையாடுகிறார்கள். எனினும் நான்தான் எல்லாம் என்ற இடத்தில் இருந்தது இல்லை . எல்லோரும் ஒரே லெவலில் இருக்கிறார்கள்.
அணியில் உள்ள அனைவரும் ஒரே மட்டத்தில் நினைக்கிறார்கள். இது ஒரு பெரிய உதவி என்று நினைக்கிறேன், வனிந்து ஒரு இளைஞனிடம் சென்று சில அறிவுரைகளை வழங்கும்போது, அவர் அதை அடிக்கடி பயன்படுத்துகிறார், அவரும் மற்ற வீரர்கள் என்ன கொடுக்கிறார்கள் என்று கேட்டு அந்த நேரத்தில் என்ன செய்வது சரியானது என்று முடிவு செய்கிறார், அதனால்தான் நான் அணியை வழிநடத்துவது எளிதானது என்று நான் நினைக்கிறேன், எந்த நேரத்திலும் எனக்கு மட்டும் கிரடிட் எடுக்க முடியாது.
ஒரு குழுவாக, குழுவில் உள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் அந்தக் கிரெடிட்டைக் கொடுக்க வேண்டும். அதுதான் அணியின் சிறப்பு."
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை