Sunday 8th of September 2024 08:20:34 AM GMT

LANGUAGE - TAMIL
.
எமது இனத்தின் இருப்பை அழிப்பதற்கே மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகிறது!

எமது இனத்தின் இருப்பை அழிப்பதற்கே மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகிறது!


எமது இனத்தின் இருப்பை அழிப்பதற்கான நடவடிக்கையாகவே போதைப்பொருள் பாவனைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது என முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர்(காணி) குணபாலன் தெரிவித்துள்ளார்.

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா இன்றைய தினம் அதன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்........

மாந்தை கிழக்கு பிரதேசமானது நீண்ட பெரும் வரலாற்றினை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பிரதேசமாகும்.

ஆரம்ப காலத்தில் இந்த பிரதேசத்தினுடைய அமைப்பு என்பது கொண்டல்வெளி, முதலியார்குளம், பனங்காமம், நட்டாங்கண்டல், ஓட்டறுத்த குளம், நவ்வி, குஞ்சுக்குளம், முதலான பாரம்பரிய கிராமங்கள் மற்றும் ராமையன்குலம் ஆகிய பாரம்பரிய கிராமங்களைகொண்டு அந்த பிரதேசத்தினுடைய மக்கள் இயற்கையோடு இணைந்ததாகிய பண்பாட்டு விழுமியங்களை பேணி வந்திருந்தார்கள்.

அவர்களுடைய வழிபாட்டு தளமாக இன்று இங்கிருக்ககூடிய கல்லிருப்பு கண்ணகி அம்மன் ஆலயம் சிறந்த ஒரு வழிபாடு தளமாக இருந்து வந்திருக்கின்றது.

அவ்வாறு இருக்கின்ற காலத்திலேயே தான் கையிலாயவன்னியன் என்று சொல்லப்படுகின்ற அரசனினுடைய ஆட்சி இந்த பிரதேசத்தினுடைய பனங்காமம் பிரதேசத்திலே மிக சிறப்பான முறையிலே இடம்பெற்றிருக்கின்றது.

இந்த வன்னியர்கள் என்று சொல்லபடுகின்றவர்கள் இந்தியாவிலே சோழர்கள் இலங்கையை வந்து ஆட்சி செய்த காலத்தில் அவர்களோடு வந்து வணிக தொடர்புகளை மேற்கொண்டிருந்தவர்கள் தான் பிற்காலத்தில் குறுநில மன்னர்களாக இந்த பிரதேசத்தில் ஆட்சிகளை கைப்பற்றிக்கொண்டிருந்தார்கள்.

அவ்வாறு சிறப்புமிக்க ஆட்சியை இந்த பிரதேசத்தில் கைலாய வன்னியன் செய்துகொண்டிருந்தான். அந்த மக்கள் இந்த கிராமங்களை செம்மையிட்டு சிறப்பான ஒரு இடங்களாகவும் பண்பாட்டு தளங்களாகவும் வைத்திருந்தார்கள்.

இதனுடைய பிற்பாடு இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியை கருதி 1956ம் ஆண்டு வவுனிக்குளம் குடியேற்ற திட்டம் உருவானது.

அந்த குடியேற்ற திட்டத்திலும் நாங்கள் பார்க்க கூடிய சிறப்பான அம்சம் என்னவென்றால் இங்கே அமைக்கப்பட்டிருக்க கூடிய ஒவொரு கிராமங்களும்.

யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய நெடுந்தீவு, கோப்பாய், கரவெட்டி ஆகிய பிரதேசத்தில் இருக்கக்கூடிய மக்கள் அவர்களுடைய பண்பாடு விலகாத வகையில் இங்கும் அதே இடங்களில் ஒரு குறிச்சிகளாக குழுமங்களாக குடியேற்றி இருந்தார்கள்.

இன்றைக்கும் நாங்கள் இந்த பண்பாடுகளை இந்த வனிக்குளம் திட்டம் இருக்க கூடிய பல கிராமங்களில் பார்க்கக் கூடியதாக இருக்கும். குறிப்பாக துணுக்காய் பிரதேசத்தில் இருக்கக்கூடிய திருநகர் பிரதேசத்தில் அந்தப் பண்பாட்டு அம்சங்கள் குறிப்பாக மரண வீடுகளில் இருந்து திருமண வீடுகள் வரைக்கும் அத்தனை சடங்கு முறைகளுக்கும் அந்தப் பண்பாட்டு விழுமியங்கள் பேணப்பட்டு கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சிறந்த பண்பாட்டு விழுமியங்களாக இருக்கக்கூடிய இந்த இடங்கள் இன்று அவ்வாறு இருக்கின்றனவா என்கின்ற மிகப்பெரிய ஒரு கேள்வி எங்கள் முன் இருக்கின்றது.

எங்களுக்கு தெரியும் ஒரு இனத்தினுடைய அடையாளம் ஒரு இனத்தினுடைய நிலைத்திருப்பு என்பது அதன் கலை பண்பாட்டு விழுமியங்களில் தான் தங்கி இருக்கின்றது.

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் எனில் முதலிலே நாங்கள் கை வைக்கின்ற இடங்கள் பண்பாட்டு விழுமியங்களை சிதைப்பது அந்த அடிப்படையிலேயே தான் பல்வேறுபட்ட நூலகங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

ஏன் இவர்கள் நூலகத்தை அழித்தார்கள்? நூலகம் என்பது ஒரு இனத்தினுடைய பண்பாட்டு விழுமியங்களை எல்லாம் பேணி வைக்கின்ற ஒரு இடம் நூலகத்தை அழிக்கின்ற போதே அதன் பண்பாடுகள் சிதைக்க பட்டு விடும்.

இதற்காகத்தான் உலகிலேயே பல நாடுகளிலும் பல இடங்களிலும் நூலகம் அழிப்பு என்பது திட்டமிட்ட வகையில் இன அழிப்பாக காணப்படுகிறது.

இங்கேயும் நாங்கள் இன்று பார்க்கலாம் எங்களுடைய வழிபாட்டு மரபுகள் மறைக்கப்படுகின்ற நிகழ்வுகள் காணப்படுகின்றன குறிப்பாக தொல்லியல் என்கின்ற போர்வையினாலே எங்களுடைய தொன்மைகள் எல்லாம் மறைக்கப்படுகின்ற அல்லது அழிக்கப்படுகின்ற ஒரு சூழல் காணப்படுகின்றது.

இங்கு இருக்கின்ற சிவபுரம் சிவன் கோயில் கூட சோழனுடைய காலத்திலிருந்து வழிபாட்டுக்குரிய ஒரு ஆலயமாக இருந்து 1956 குடியேற்றத்தின்போது அது மீளெளுட்சி பெற்ற ஆலயமாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறாக எங்கள் கலை பாரம்பரியங்களும் கலாச்சார விளுமியங்களும் நிறைந்து இருக்கக்கூடிய ஒரு பிரதேசமாக இந்த மாந்தை கிழக்கு பிரதேசம் இருந்தது 1978 ஆம் ஆண்டு வரைக்கும் இந்த மாந்த கிழக்கு பிரதேசமானது மன்னர் மாவட்டத்துடன் அதன் ஒரு பகுதியாக இருந்தது.

1978 ஆம் ஆண்டு முல்லைதீவு ஒரு தனியான ஒரு மாவட்டமாக வருகின்ற பொழுது மன்னாரில் இருந்து பிரிக்கப்பட்டு முல்லைத் தீவுடன் இணைக்கப்பட்டது.

அவ்வாறு இருந்திருக்க கூடிய இந்த பிரதேசத்தினுடைய இன்றைய நிலை என்பது உண்மையிலேயே எங்களுக்கு வேதனை அளிக்கின்றது எங்களாலே போற்றப்பட்டிருக்கக்கூடிய பாரம்பரியமான வடிவங்கள் எங்களுடைய மரபுகளிலே இருக்கின்றதா

ஆரம்ப காலங்களில் திராவிடத்தோடு ஆரியத்தினுடைய கலை கலாச்சார மரவு இணைந்து படி படியாக அதனை சிதைக்க தொடங்கியது

அதனுடைய பிற்பாடு ஐரோப்பியருடைய வருகையோடு ஐரோப்பியருடைய கிளை கலாச்சார மோகங்கள்னாலே அவற்றை பின்பற்றுவதற்கு மக்கள் பழகிக் கொண்டார்கள் அதனால் அதனுடைய பண்பாடுகளும் சிதைக்கப்பட்டன ஆக மொத்தம் உடைய தனித்துவமும் பண்பாடும் இலக்கு வைத்து தாக்கப்படுகின்ற இன்று வரை இடம்பெற்று கொண்டிருக்கின்றது.

இன்று உங்களுக்கு தெரியும் இலங்கையில் இருக்கக்கூடிய பாடசாலைகளில் ஒரு இலட்சமானவர்கள் மது போதைக்கும் மற்றும் போதை வஸ்துக்கும் அடிமையாக இருக்கின்றார்கள்.

கிட்டத்தட்ட 5000 மாணவர்கள் இந்த பாடசாலை வாழ்க்கையை மட்டுமல்ல இந்த வாழ்க்கையில் இருந்து தூர எறியப்பட்டிருக்கின்றார்கள்.

அண்மைய தரவின்படி ஒரு வாரத்திலே 10 மாணவர்கள் யாழ்ப்பாணத்திலே போதை வாஸ்து பாவனையினால் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கின்றார்கள்

இவை எதற்காக இடம்பெறுகின்றது என்ற கேள்வி இன்று பல்வேறுபட்ட தரப்பினருக்கும் உள்ளது.

உண்மையில உங்கள் இனத்தினுடைய இருப்பை அளிக்க வேண்டுமானால் முதலிலே அவர்களை இந்த விழுமியங்களில் இருந்து தூர அறியப்படுகின்றவர்களாக அல்லது அதில் புறந்தள்ள பட்டவர்களாக மாற்ற வேண்டிய ஒரு தேவைப்பாடு இருக்கின்றது

அதுதான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

ஆனால் அதனை உணராத சமூகம் ஆகிய நாங்கள் இருக்கிறோம் என்கின்ற வேதனை தான் எங்களுக்கு மிகப்பெரிய ஒரு பிரச்சனை

குடும்பத்தினுடைய அலகுகள் சின்னாபின்னமாக்கப்பட்டதன் விளைவாகவே இன்று எத்தனையோ பிள்ளைகள் மாணவர்கள் போதை வஸ்துக்கு அடிமையாக காணப்படுகிறார்கள்

அன்றைய நாளில் எல்லாம் பெற்றோர்களினாலே கூர்ந்து கவனிக்கப்பட்டிருக்கக்கூடிய பிள்ளைகள் அவர்களுடைய ஒழுக்கம் மற்றும் அந்த பிள்ளைகளுடைய நடத்தைகள் அவர்களாலே கவனி படாமல் விடப்படுகின்ற காரணத்தினாலே இன்று அது மாற்றமடைந்து போதைக்கு அடிமையாக காரணமாக இருக்கின்றது

இன்று எந்த ஒரு பெற்றாராகினும் தனது பிள்ளையினுடைய ஒழுக்கத்தினை பேசுவதற்கு தயாராக இல்லை.

ஆகவே இந்த கலாச்சார விழுமியங்களை போற்றுகின்ற இந்தப் பண்பாட்டு விழாவிலே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் இன்னொரு அந்நிய கலாச்சாரத்தினாலே ஊடுருவலாக எங்களுடைய மரபுகளை அவற்றிற்கு எதிராக நடக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் நாங்கள் இடம் கொடுக் கமல் உங்களுக்கென்று பேணப்பட்டு இருக்கக்கூடிய தமிழர்களுடைய கலாச்சார விடுமியங்களை பண்பாட்டு அம்சங்களை பின்பற்றுகின்றவர்களாக அவற்றின்பால் இருக்கக்கூடிய நெறிகளை கட்டி காப்பவர்களாக மீண்டும் வடிவம் கொடுப்பவர்களாக எங்களுடைய கலைைளை மீண்டும் வளர்த்தவர்களாக எங்களுடைய கலாச்சாரத்தின்பால் எங்களுடைய பிள்ளைகளை இட்டு செல்பவர்களாக நாம் மாற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், மன்னார், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE