வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் பங்குபற்றுதலுடன் மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா இன்று காலை கல்லூரியின் ஆரம்ப பிரிவு பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது .
இன்று காலை யாழ்ப்பாணம் காந்தியின் திருவுருவ சிலையிலிருந்து துவிச்சக்கரவண்டி பவனி மூலம் மகாத்மா காந்தி 1927 ஆம் ஆண்டு வருகை தந்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி நோக்கிய துவிச்சக்கர வண்டி பவனியை அனைத்து மத தலைவர்கள் கொடியசைத்ததோடு யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஆரம்பித்து வைத்தார்.இதன்பொழுது துணைத்தூதரக அதிகாரிகள்,காந்தி சேவா சங்கம் மற்றும் வட்டுகோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி மாணவர்களும் பங்குகொண்டனர்.
இதனை தொடர்ந்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் வருடாவருடம் இடம்பெறும் காந்தி விழா ஆரம்பமாகிய நிலையில் காந்தியினை நினைவுகூரும் முகமாக கலை நிகழ்வுகள் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தூதரக அதிகாரிகள்,காந்தி சேவா சங்கத்தினர்,கல்லூரியின் அதிபர் வண.கலாநிதி டி.எஸ் சொலமன், பிரதி அதிபர்,உப அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்