இணையம் மூலம் நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் புதுமையான திட்டங்கள் கேட்ஜெட்கள் அறிமுகத்துக்கான கோரிக்கைகள் ஆகியவை வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இப்போது கையடக்க வாஷிங் மெஷின் ஒன்றை அறிமுகம் செய்ய வாஷ்வாவ் (WASHWOW ) எனும் குழு முயற்சி செய்து வருகிறது.
சோப் இல்லாமல் துணிகளைக் கசக்காமல் அடித்துத் துவைக்காமல் இந்தச் சாதனம் அழகாகத் துணி துவைத்துத் தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எப்படிச் சாத்தியம்? பக்கெட் ஒன்றில் தண்ணீரை நிரப்பி அதில் துவைக்க வேண்டிய துணியைப் போட்டு இந்தச் சாதனத்தை முக்கினால் இந்தச் சாதனம் எலக்ட்ரோலைசிஸ் எனும் முறைப்படி துணியில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்கிவிடுவதாக இச்சாதனத்துக்கான கிக்ஸ்டார்ட்டர் பக்கம் தெரிவிக்கிறது.
கையடக்கச் சாதனம் என்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம். எனவே பயணங்களின்போது பயன்படுத்த ஏற்றது. துணிகள் என்றில்லை, பொம்மை, சமையலறைப் பொருட்கள் போன்றவற்றையும் இதன் மூலம் சுத்தம் செய்யலாம்.
இந்தப் புதுமையான சாதனத்தை அறிமுகம் செய்ய கிக்ஸ்டார்ட்டரில் கேட்டதைவிட அதிக நிதி கிடைத்திருக்கிறது.
Category: தொழில்நுட்பம், புதிது
Tags: