எச்.ஐ.வி தாக்கமுள்ள மனிதர்களுக்கான சிகிச்சை முறைமையை கண்டறிவதற்கான முதல் படிநிலையாக எச்.ஐ.வி தாக்கமுள்ள எலிகளிடமிருந்து, எச்.ஐ.வி வைரஸை, அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
இது வைரஸுடன் வாழும் கிட்டத்தட்ட 37 மில்லியன் மக்களுக்கு குணமளிக்கும் ஒரு உறுதியான படியாகும்.
அமெரிக்காவின் நெப்ரஸ்கா மற்றும் டெம்பிள் பல்கலைக்கழகங்களின் 30இற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இந்த சிகிச்சை முறைமையில் பங்கேற்றுள்ளனர்
இதன்போது வைரஸ் ஒழிப்பு மருந்தை, மரபணு சோதனைக் கருவி ஊடாக எலிகளின் உடல்களுக்குள் செலுத்தியுள்ளனர். ஆய்வின் முடிவில், ஆராய்ச்சியாளர்கள் 23 எலிகளில் ஒன்பதில் இருந்து வைரஸை வெற்றிகரமாக அகற்றினர்.
Category: தொழில்நுட்பம், புதிது
Tags: