54 ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனவ் ரஷ்யாவில் தனது 85 ஆவது வயதில் காலமானார்.
சோவியத் யூனியன் என முன்னர் அழைக்கப்பட்ட ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர் அலெக்சி லியோனவ் விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய மைல்கல்லாக அறியப்பட்டவர்.
இவர் 1965ம் ஆண்டு வோஸ்கோட் -2 விண்கலத்தை விட்டு வெளியேறி 12 நிமிடங்கள் ஒன்பது வினாடிகள் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தார்.
விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய வரலாற்று சிறப்புக்குரிய சாதனையை ஏற்படுத்திய அலெக்சி லியோனவ் சமீபகாலமாக உடல்நலக்குறைவால் மாஸ்கோவின் பர்டென்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அலெக்சி லியோனோவ் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என அவரது உதவியாளர் தெரிவித்தார்.
மரணமடைந்த அலெக்சி லியோனோவ் ரஷிய ராணுவத்திலும் பின்னர் விமானப்படையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: தொழில்நுட்பம், பகுப்பு
Tags: