உலகின் மிகப் பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படும் 8,000 ஆண்டுகள் பழமையான இயற்கை முத்து ஒன்று அபுதாபியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முத்து விரைவில் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கற்காலத்தில் இருந்தே பொருட்கள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன என்பதற்கான சான்று இது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
8,000 ஆண்டுகள் பழமையான இந்த முத்தின் அடுக்குகள் கி.மு 5800-5600 காலகட்டத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.
அபுதாபியில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பழமையான முத்து நமது சமீபத்திய பொருளாதார மற்றும் கலாசார வரலாற்றில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது என இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாசார மற்றும் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: கலை & கலாசாரம், பகுப்பு
Tags: உலகம்