Wednesday 24th of April 2024 10:27:46 AM GMT

LANGUAGE - TAMIL
விண்வெளியில் 300 நாட்கள் சாதிக்கும் அமெரிக்க பெண்!

விண்வெளியில் 300 நாட்கள் சாதிக்கும் அமெரிக்க பெண்!


சர்வதேச ஆய்வு மையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற விண்வெளி வீராங்கனை சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 20-ஆம் திகதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற கிறிஸ்டினா கோச், எதிர்வரும் பெப்ரவரி 6-ஆம் திகதி வரை விண்வெளியில் தங்கியிருக்க திட்டமிடப்பட்டுள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருவது வழமையாகும்.

அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள்.

அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த ஜூலை மாதம் 20-ஆம் திகதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை வரை அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 289 நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார்.

அடுத்த வருடம் பெப்ரவரி 6-ஆம் திகதி கிறிஸ்டீனா கோச் பூமிக்குத் திரும்புகிறார். அப்போது அவர் 300 நாட்களுக்கு மேல் விண்வெளியில் கழித்திருப்பார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தபோது 4 முறை கிறிஸ்டீனா கோச் விண்வெளியில் நடந்துள்ளார்.

ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் தனது சக ஊழியரும் சிறந்த நண்பருமான ஜெசிகா மீருடன் விண்வெளியில் நடந்து இருவரும் சாதனை படைத்தனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே ஏழு மணி நேரத்திற்கும் மேலான பயணத்தில், பெண்கள் இருவரும் வெண்வெளி நிலையத்தின் சூரிய வலையமைப்பிற்கு கூடுதலாக உடைந்த மின் கட்டுப்படுத்தியை சரிசெய்யும் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.

நிலையத்தின் சூரியசக்தி அமைப்பிற்கான புதிய சூரிய பட்டரிகளை நிறுவ ஜனவரி மாதத்தில் மீண்டும் இரண்டு முறை வெளியே செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

36 நாடுகளைச் சேர்ந்த சுமார் 550-க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் இன்றுவரை விண்வெளியில் வலம் வந்திருக்கிறார்கள். 18 விண்வெளி வீரர்கள் பயணத்தின்போது இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT


Category: தொழில்நுட்பம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE