Friday 17th of May 2024 03:40:03 AM GMT

LANGUAGE - TAMIL
புதிய அரசு மனித உரிமைகளை முடங்கச் செய்துள்ளது!

புதிய அரசு மனித உரிமைகளை முடங்கச் செய்துள்ளது!


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமானது விமர்சகர்கள் மற்றும் மனித உரிமகள் பாதுகாவலர்களை இலக்குவைத்து ஒரு அச்சமூட்டும் அடக்குமுறை நடவடிக்கையை கட்டவிழ்துவிட்டுள்ளது.

இவ்வாறு ஜஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் மற்றும் இலங்கை ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர் அமைப்பு என்ற இரண்டு மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமது சொந்தப் பாதுகாப்புக்காக பெயர் வெளியிட விரும்பாத இலங்கையிலுள்ள செயற்பாட்டாளர்களின் உதவியுடன் இந்த இரண்டு அமைப்புக்களும் ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள், வழக்குத் தொடுநர்கள், கல்விமான்கள், மற்றும் எதிர்ப்பாளர்களை இலக்குவைத்து தேர்தலுக்கு முன்பும் பின்பும் இடம்பெற்ற மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றிய 69 சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளன.

சில சமயங்களில் அச்சுறுத்தல்கள் மிகவும் மோசமாக இருந்ததுடன், பாதிக்கப்பட்ட நபர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான எந்த முயற்சிகளும் இல்லாது ஒழிக்கப்படுவதுடன் மேலும் நவீனமயப்படுத்தப்பட்ட மற்றும் இறுக்கமான கண்காணிப்புக்களுடன் இலங்கையில் ஜனநாயக நடவடிக்கைகள் பாரிய அளவில் குறைவடைந்து வருவதை நாங்கள் பார்க்கிறோம் என உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் சர்வதேச சமூகமானது இலங்கை அரசிற்கு வழங்கும் அதிகரித்த பாதுகாப்பு உதவியானது மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது இப்போது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தவறான விதத்தில் பயன்படுத்தப்படாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷ தனது முன்னாள் படையணியின் பல உறுப்பினர்களை அதிகாரம் மிக்க பதவிகளுக்கு நியமிப்பதன் மூலம் எவ்வாறு தனது விழுதுகளை அரசாங்கம் முழுவதும் பரப்பினார் என்பதையும் அவர் எவ்வாறு காவல்துறை மற்றும் புலனாய்வு நடவடிக்களைகளை மேலும் இராணுவமயப்படுத்தியுள்ளார் என்பதையும் இந்த அறிக்கை காட்டுகிறது.

மோசடி உட்பட கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களை விசாரணை செய்வதில் தொடர்புபட்டவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

முன்னர் மோசடி அல்லது போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட தனி நபர்கள் மீண்டும் பதவிக்கு வந்துள்ளர்கள்.

அதிகாரம் வாய்ந்த பதவிகளை ஆக்கிரமித்துள்ள இந்த அரசானது அம்பலத்துக்கு வந்துள்ளது என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பாசனா அபயவர்த்தன தெரிவித்தார்.

முன்னர் பகிரங்கமாக கருத்து வெளியிட்ட ஊடகவியலாளர்கள், வர்த்த சங்க செயற்பாட்டாளர்கள், மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை அமைதியடையச் செய்யும் அளெகரியமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE