Thursday 2nd of May 2024 09:20:08 AM GMT

LANGUAGE - TAMIL
கொல்லப்பட்டோர் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் 'வலிமையான கனடா' நிதியம்!

கொல்லப்பட்டோர் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் 'வலிமையான கனடா' நிதியம்!


ஈரான் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட கனேடியர்களுக்கு நிதி சேகரிக்கும் நோக்கில் வலிமையான கனடா ( (Canada Strong) ) என்ற நிதியத்தை ரொராண்டோ வர்த்தகர்கள் ஆரம்பித்துள்ளனர்.

பாரமவுண்ட் பைன் புட்ஸ் நிறுவனத்தின் தலைவரும், பக்கிஹ் அறக்கட்டளையின் நிறுவனருமான மொஹமட் பகிஹ் தலைமையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதன் ஊடாக அஞ்சலி செலுத்தும் நோக்கில் இந்நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ரொராண்டோ அறக்கட்டளையால் கையாளப்படும் நிதியத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை உதவ கனேடியர்களை நாங்கள் இப்போது ஊக்குவித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

டென்டன்ஸ் கனடா எல்.எல்.பியின் மேற்பார்வையுடன், அனைத்து நன்கொடைகளும் ரொராண்டோ அறக்கட்டளை மூலம் திரட்டப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்குக் கையளிக்கப்படும்.

இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து கனேடியர்களும் ஒன்றிணைந்து கனேடியராக இருப்பதை உலகுக்குக் காண்பிப்பதற்கான நேரம் இது என இந்த நிதியத்துக்கான பிரச்சார வலைத்தளம் கூறுகிறது.

டொராண்டோ மேயர் ஜான் டோரியுடன் இணைந்து நேற்று திங்கட்கிழமை காலை பக்கிஹ் இதற்கான பிரசாரத்தைத் தொடங்கினார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஆதரிப்பதற்காக 1.5 மில்லியன் டொலர் திரட்டுவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிதியத்துக்காக பகிஹ் தனிப்பட்ட முறையில் 30,000 டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE