Thursday 2nd of May 2024 08:08:39 PM GMT

LANGUAGE - TAMIL
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைச் சூழல் பாதிப்புக்கள் தொடர்பில் அங்கயன் ஆராய்வு!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைச் சூழல் பாதிப்புக்கள் தொடர்பில் அங்கயன் ஆராய்வு!


பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைச் சூழல் மாசுறுவதாக தொடர்ந்தும் அந்தப் பகுதி மக்கள் முன்வைத்து வருகின்ற முறைப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கயன் இராமநாதன் வைத்தியசாலைக்கு சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றார்.

ஆதாரவைத்தியசாலையின் மருத்துவக் கழிவுப்பொருட்கள் எரிக்கின்ற நடவடிக்கை மற்றும் புகைபோக்கி பழுதாகியுள்ளமை உட்பட்ட சுகாதார சீர்கேட்டு நடவடிக்கைகளால் தொடர்ந்தும் அந்தப் பகுதியில் வாழ்வதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக போராட்டங்களை தொடர்ந்தும் அந்தப் பகுதி மக்கள் முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு பயணம் மேற்கொண்டுள்ள அங்கயன் இராமநாதன் வைத்தியசாலை நிர்வாகத்துடனும் மக்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவருகின்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE