Friday 17th of May 2024 05:51:27 AM GMT

LANGUAGE - TAMIL
விஞ்ஞான தொழிநுட்பமே நாட்டுக்கு தேவை!

விஞ்ஞான தொழிநுட்பமே நாட்டுக்கு தேவை!


தொழிநுட்பத் துறையை முன்னேற்றமடையச் செய்து நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தியடையச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலங்க சுமத்திபால தொழிலாளர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணமுடியாது என்றும் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தொழிநுட்பத்தின் மூலம் பொருளாதாரத்தை அபிவிருத்தி அடையச் செய்வதற்கான திட்டங்களை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.

அதற்கமைய அனைத்து துறைகளிலும் தொழிநுட்ப வசதிகளை ஏற்படுத்தி முறையான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் , ஊழலை கட்டுப்படுத்தவும் , செலவுகளை குறைக்கவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய செயற்கை தொழிநுட்ப முறை , யூரோ டெக்னோலிஜி , நெனோ தொழிநுட்பம் , புதிய சக்திகளை உபயோகித்து தொழிநுட்பத்தை செயற்படுத்தல் மற்றும் பழைமையான பாரம்பரிய தொழிநுட்பத்தை முன்னிலைப்படுத்திய செயற்பாடுகள் , தகவல் தொழிநுட்பம் மற்றும் விண்வெளி ஊடாகவும் தொழிநுட்ப செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியிலே விஞ்ஞானம் , தொழிநுட்பம் , பொருளியல் மற்றும் கணிதம் போன்ற கற்கை நெறிகளுக்கான தொழிநுட்பங்களை பயன்படுத்தி அதனுடாக தொழிநுட்ப கல்வியை முன்னேற்றுதல் . மற்றும் 'ரொபோ டிக் ' முறை தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நம் நாட்டை பொறுத்தமட்டில் 750 விஞ்ஞானிகளாவது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதேவேளை 30 ஆயிரம் ஆய்வாளர்களாவது இருக்க வேண்டும். இவற்றில் முன்னேற்றம் காணது தொழிநுட்பத் துறையில் எம்மால் எந்தவித முன்னேற்றமும் அடைய முடியாது.

மாணவர்கள் மத்தியிலும் தொழிநுட்பகற்கைகளை மேற்கொண்டு சிறந்த தொழிநுட்ப செயற்பாட்டாளர்களாக உருவாக்க வேண்டும். இதனைவிடுத்து வெறுமனே தொழிலாளர்களாக வெளிநாடு செல்வதால் எந்தவித பயனையும் பெற முடியாது- என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE