Friday 17th of May 2024 06:46:40 AM GMT

LANGUAGE - TAMIL
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விளக்கமறியல்!

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விளக்கமறியல்!


கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இன்று நுகேகொடை நீதவான் வசந்தகுமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் நேற்றிரவு வரை விசாரணைகள் இடம்பெற்றாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மாதிவெலயிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு தொகுதியில் வைத்து நேற்று மாலை 6.20 அளவில் ரஞ்சன் ராமநாயக்க குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் ரஞ்சன் ராமநாயக்க, நீதிபதிகளின் செயற்பாடுகளுக்கு தலையீடு செய்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளமையே அவரை கைது செய்வதற்கான குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE