Friday 17th of May 2024 04:42:32 AM GMT

LANGUAGE - TAMIL
வடக்கில் 5 பாடசாலைகளில் புதிய கட்டடங்கள் மாணவர்களிடம் கையளிப்பு

வடக்கில் 5 பாடசாலைகளில் புதிய கட்டடங்கள் மாணவர்களிடம் கையளிப்பு


இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் வடக்கில் 5 பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது யாழ்ப்பாணம் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்கான புதிய கட்டடம் மற்றும் கதிஜா முஸ்லிம் மகளிர் வித்தியாலயம், வவுனியா விஸ்வநாதர் ஆரம்ப வித்தியாலயம் உள்ளிட்ட 5 பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடங்களே இவ்வாறு கைளிக்கப்பட்டன.

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், இலங்கைக்கான பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் விநோத் கே ஜெக்கப் ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

225 கோடி ரூபா செலவில் வடக்கில் உள்ள 27 பாடசாலைகளில் புதிய வகுப்பறைக் கட்டடங்களை அமைப்பதற்கு இந்தியா நிதியுதவி வழங்குகிறது.

இதற்கான திட்டத்தின் கீழ் 20 பாடசாலைகளில் வகுப்பறைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஏனைய பாடசாலைகளின் கட்டடங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE