Friday 26th of April 2024 04:36:44 AM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -07.02.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -07.02.2020


மேஷம்

மேஷம்: புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்க ளுக்கு நெருக்கமாவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். வெற்றிக்கு வித்தி டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் குதூகல மான சூழ்நிலை உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள்முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் உதவிகரமாக இருப் பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கை யைப் பெறுவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாதபயம் கவலை வந்து போகும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். வியாபாரத் தில் வேலையாட்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர் கள். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சனை கள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிபெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்புமரியாதை உயரும். அதிகாரப் பதவியில் இருப் பவர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். சிறப்பான நாள்.

கன்னி

கன்னி: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் நல்ல இமேஜ் உண் டாகும். வியாபாரத்தில் முன்னிலை பெறுவீர்கள். உதவிகள் கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் இருந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். புதிய பொருள்களை வாங்குவீர்கள். உத்தி யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு கிடைக் கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் மனஸ்தாபங்கள்வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

தனுசு

தனுசு: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். அரசால் அனுகூலம் உண்டு.வழக்குவிஷயங்கள் சாதகமாக முடியும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமைய கண்டு வியப்பார்கள். மாற்றங்கள் நிறைந்த நாள்.

கும்பம்

கும்பம்: புதிய திட்டங்களை தீட்டு வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயமுண்டு. அக்கம் -பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தி யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.புதுமை படைக்கும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE