Saturday 12th of October 2024 12:50:19 AM GMT

LANGUAGE - TAMIL
இந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்!

இந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்!


இந்தியளவில் இணையப் பயன்பாட்டில் உள்ள மொழிகளுக்கிடையில் விக்கிப்பீடியா அறக்கட்டளை மற்றும் கூகுள் நிறுவனங்களால் நடாத்தப்பட்ட போட்டியில் தமிழ் மொழி முதலிடத்தை பெற்றுள்ளது.

விக்கிப்பீடியா மற்றும் கூகுள் ஆகியவை இணைந்து இரண்டாவது ஆண்டாக நடத்திய கட்டுரைப் போட்டியில் அதிகளவான கட்டுரைகளை சமர்ப்பித்தத்ன மூலம் தமிழ் மொழி முதலிடத்தை பெற்றுள்ளது.

கடந்த ஒக்டோபர்-10 முதல் இந்த ஜனவரி-10 வரையான மூன்று மாதகாலங்களில் தொடர்ச்சியாக ஒவ்வொரு மொழியிலும் விக்கிப்பீடியா இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட கட்டுரைகளின் அடிப்படையில் கடந்த முறை முதலிடத்தை பெற்ற பஞ்சாபி (குர்முகி எழுத்து வடிவம்) மொழியை இரண்டாமிடத்திற்கு பின்தள்ளி தமிழ் மொழி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஆங்கிலத்தில் ‘டைகர்’ என்றும் தமிழில் ‘வேங்கை 2.0’ எனவும் அழைக்கப்படும் இப்போட்டியில் தமிழில் 62 பேர் மொத்தமாக 2,959 கட்டுரைகளை எழுதியிருந்தமை மூலம் தமிழ் மொழிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

கடந்த முறை முதலிடத்தை பெற்ற பஞ்சபி (குர்முகி எழுத்து வடிவம்) மொழியில் 34 பேர் 1,748 கட்டுரைகளை எழுதியதன் அடிப்படையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

49 பேர் 1,460 கட்டுரைகளை சமர்ப்பித்ததன் மூலம் வங்க மொழி மூன்றாவது இடத்தையும், 25 பேர் 1,377 கட்டுரைகளை சமர்ப்பித்து உருது மொழி நான்காவது இடத்தையும், 18 பேர் 566 கட்டுரைகளை சமர்பித்து சந்தாலி மொழி ஐந்தாவது இடத்தையும், இந்தியாவில் அதிகம் பேரால் பேசக்கூடிய ஹிந்தி மொழி சார்பில் 26 கட்டுரையாளர்களால் 417 கட்டுரைகள் மட்டுமே சமர்பிக்கப்பட்டுள்ளதால் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது.

தெலுங்கு மொழியில் 416 கட்டுரைகள் எழுதப்பட்டு ஏழாவது இடத்தையும், கன்னட மொழியில் 249 கட்டுரைகள் எழுதப்பட்டு எட்டாவது இடத்தையும், மலையாளத்தில் 229 கட்டுரைகள் வழங்கப்பட்டு ஒன்பதாவது இடத்தையும் மராத்தி மொழியில் 220 கட்டுரைகள் எழுதப்பட்டு பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: தொழில்நுட்பம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE