4 கிலோமீட்டர் அகலம் கொண்ட எரிகல்லொன்று பூமியை அண்மித்து கடக்க உள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசா அறிவித்துள்ளது.
இந்த பிரமாண்ட எரிகல்லானது வரும் ஏப்ரல்-29 அன்று அதிகாலை 4.56 மணிக்கு பூமிக்கு மிக அருகாக பறந்து செல்லும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பறந்து வரும் எரிகல் பூமியில் மோதினால் மிகப்பெரும் அழிவு ஏற்படும் என நாசா குறிப்பிட்டுள்ளது.
அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் பூமியை நெருங்கும் போது அதன் அளவு குறைந்து சிறய துகழ்களாக மாறவே வாய்புகள் அதிகமாக இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிகல்லுக்கு 52768 (1998 ஓஆர்2) என நாசா பெயரிட்டுள்ளது.
இந்த எரிகல்லானது 1998 இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்திற்கு 31 ஆயிரத்து 320 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு மிக அருகில் கடக்க இருப்பதால் இதனை அபாயகரமான எரிகல்லாக நாசா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: தொழில்நுட்பம், பகுப்பு
Tags: