Monday 27th of January 2025 08:54:33 PM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -14.03.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -14.03.2020


மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை புரிந்து கொள்ளமாட்டார். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும்.மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்பை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் வீடுதேடி வந்து பேசுவார்கள். அரசாங்கவிஷயம் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமைபடைக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வுகிடைக்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். புதுமை நடக்கும் நாள்.

துலாம்

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி அமைதிகிட்டும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் புதுவாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையில் முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: எதிர்காலம் பற்றிய கவலைவந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். வாகனம் தொந்தரவு தரும்.உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சி னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மகரம்

மகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர்முடிவுகள் எடுப்பீர்கள். பிரிய மாணவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரி யாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும்நாள்.

மீனம்

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE