ஏனைய வகை பாத்திரங்களை விட செப்பு பாத்திரங்களுக்கு வைரஸ்களையும் பக்ரீரியாக்களையும் விரைவாக செயலிழக்கச் செய்து அழித்துவிடும் ஆற்றல் மிக்கது என தற்போது ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 என்று பெயரிடப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்து இப்போதுதான் உலகம் வெகுவாக அறிந்துள்ளது.
கொரோனா என்ற ஒரு வகை வைரஸ் 1980 இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை உயிரைக்கொல்லும் தன்மையற்றவை. இன்று பரவியிருக்கும் கோவிட்-19 எனப் பெயரிடப்பட்டிருக்கும் கொரோனா அளவுக்கு அவை வீரியமாக இருந்ததில்லை.
இவ்வாறு இருக்கையில் அவ்வாறான கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னரே நடைபெற்றுள்ளது. அவ்வாய்வில் தான் கொரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ்களையும் பக்டீரியாக்களையும் விரைவாகவே செயலிக்கச் செய்யும் தன்மை செப்புக்கு உண்டு என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
சுவாச குழாயில் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும் இந்த வகை கொரோனா வைரஸ் நுரையீரல் செல்களை பாதிக்கும் தன்மையும் கொண்டது. இந்த நோயை பரப்பும் கொரோனா வைரஸ் பீங்கான், டெப்ளான், கண்ணாடி, சிலிக்கன், றப்பர் போன்ற பொருட்களில் நீண்ட நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டிருந்தது. ஆனால் செப்பு பாத்திரங்களில் இருந்த கொரோனா வைரஸ் விரைவாகவே செயலிழந்து விட்டது.
பக்டீரியா, ஈஸ்ட், வைரஸ் போன்றவை செப்பு உலோக பாத்திரங்களில் படிந்திருந்தால் விரைவாகவே செயலிழந்து விடும் என்பது புதிய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
செப்பு உலோகத்திற்கு கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு. அதனால் உடல் எடையை குறிக்க விரும்புகிறவர்கள் அதனை பயன்படுத்தலாம். அதில் இருக்கும் ஆன்டி ஒக்ஸிடன்டுகள் சருமத்திற்கும் நலம் சேர்க்கும். முதிய தோற்றம் ஏற்படுவதை தடுக்கவும் உதவும்.
ஸ்டீல் பாத்திரங்களை விட செப்பு பாத்திரங்கள் 20 மடங்கு வெப்பத்தை கடத்தும் தன்மை கொண்டது. சீரான வெப்ப நிலையை கடத்தி உணவை சமைத்து வைக்கவும் உதவும். தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், பக்டீரியாக்களால் செப்பு பாத்திரங்களில் உயிர்வாழ முடியாது என்பதால் உணவில் இருந்து கிருமிகள் பரவுவதையும் தடுக்கிறது. செப்பு பாத்திரங்களை சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம்.
செப்பு உலோகத்தால் உருவாக்கப்பட்ட கதவுகளில் வைரஸ்களும், பக்டீரியாக்களும் இரண்டு மணி நேரம் வரை உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செப்பு பாத்திரங்களுக்கும் அது பொருந்தும். ஆனால் பிளாஸ்டிக் போத்தல்களில் மூன்று நாட்கள் வரை வைரஸ்கள் உயிர்வாழ்வது தெரியவந்துள்ளது. அதனால் பக்டீரியா, வைரஸ் போன்ற தொற்று கிருமிகளுக்கு எதிர்ப்பு பொருளாக செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.
பண்டைய காலத்தில் செப்பு பாத்திரங்களை முன்னோர்கள் பயன்படுத்தியதற்கான காரணம் அறிவியல் பூர்வமாக இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்துவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளமை மாற்றத்திற்கான அறிகுறியாகும்.