Monday 27th of January 2025 10:01:03 PM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -31.03.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -31.03.2020


இன்று! விகாரி வருடம், பங்குனி மாதம் 18ம் திகதி, ஷாபான் 5ம் திகதி, 31.3.2020 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 11:21 வரை, அதன் பின் அஷ்டமி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் பகல் 2:47 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்த - மரணயோகம்.

நல்ல நேரம் : காலை மணி 7.30 முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் மணி 3.00 மாலை முதல் 4.30 மணி வரை. எமகண்டம் : காலை மணி 9.00 முதல் காலை 10.30 மணி வரை. குளிகை : பிற்பகல் மணி 12.00 முதல் பிற்பகல் 1.30 மணி வரை. சூலம் : வடக்கு

• பரிகாரம் : பால் • சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை • பொது துர்கை வழிபாடு.

மேஷம்

மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். பொறுப்புகள் கிடைக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையும் இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி இழப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினர் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கன்னி

கன்னி: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சாதிக்கும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியா பாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்

மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைசல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெற்றியடையும் நாள்


Category: ஜோதிடம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE