Monday 24th of June 2024 07:37:00 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 05.04.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 05.04.2020


இன்று! விகாரி வருடம், பங்குனி மாதம் 23ம் திகதி, ஷாபான் 10ம் திகதி, 5.4.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி பகல் 3:49 வரை, அதன்பின் திரயோதசி திதி, மகம் நட்சத்திரம் காலை 11:28 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண - சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை மணி 7.30 முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : மாலை மணி 4.30 முதல் மாலை 6.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் மணி 12.00 முதல் பிற்பகல் 1.30 மணி வரை. குளிகை : பிற்பகல் மணி 3.00 முதல் மாலை 4.30 மணி வரை. சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம் சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம் பொது பிரதோஷம், சிவன், நந்தீஸ்வரர் வழிபாடு.

மேஷம்

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வுகிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக்கொள்ளும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். நிம்மதியான நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். போராட்டமான நாள்.

கன்னி

கன்னி: சில காரியங்களை அலைந்துதிரிந்து முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளை அன்பாக அரவணைத்து செல்லுங்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் சங்கடங்கள் உருவாகும். அலைச்சலுடன்ஆதாயம் தரும் நாள்.

துலாம்

துலாம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர்அறிமுகமாவார் உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சிறப்பான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை தற்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையைமாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். குழுவினர்கள் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். பண உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுபிடிப்பது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: மறைந்து கிடந்த திறமைகள்வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுகிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகம் ஆவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE