கொரோனா தொடர்பான போலி செய்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடு விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே குறுந்தகவல்களை அனுப்ப முடியும். முன்னர் ஒரே தடவையில் 5 பேருக்கு மட்டும் அனுப்பும் வகையில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவ் எண்ணிக்கை ஒன்றாக குறைக்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா குறித்த கவனம் திரும்பியுள்ள நிலையில் அது குறித்த செய்திகள் சரமாரியாக சமூக வலைத்தளங்களுடாக பகிரப்பட்டு வருகின்றது. இதனூடாக போலியான செய்திகளும் பரப்பப்பட்டு வருவதால் உலகளாவில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றது.
பெரும்பாலானா நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஏனைய நடுகளில் மக்களின் தேவையற்ற பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டும் உள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப்போயுள்ளனர்.
இதன் விளைவாக திறன் பேசிகளின் (ஸ்மார்ட் போன்) பயன்பாடு உச்ச நிலையை அடைந்துள்ளது. இதன் மூலம் சமூக வலைத்தள பயன்பாடே பிரதானமாக அதிகரித்துள்ளது. கிடைக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்த ஆராய்வு இன்றி பார்த்தவுடன் தமது நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு பகிர்வதென்பது திறன் பேசி பயனாளர்களின் தலையாய கடனாக மாறியுள்ளது.
இது உலகளாவிய குழப்பநிலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வட்சப் நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
உலகளாவில் 200 கோடிக்கு அதிகமானவர்கள் வட்சப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 40 கோடிக்கும் அதிகமானவர்கள் வட்சப் செயலியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: தொழில்நுட்பம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்