உலகளாவிய கொரோனா பரவுதலுக்கு 5ஜி அலைக்கற்றைகளே காரணம் எனக் கூறும் காணொளிப் பதிவுகள் யூரியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் அதனை அகற்றி வருகிறது யூரியூப் நிறுவனம்.
5ஜி அலைக்கற்றை காரணமாகவே கொரோனா பரவியதான போலி செய்திகளை பரப்பும் காணொளிகள் அண்மைய நாட்களில் பலராலும் யூரியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து இவ்வாறானா போலி காணொளிப் பதிவுகளை தடைசெய்துள்ளது யூரியூப் நிறுவனம்.
இதைவிட, கொரோனாவுக்கு காரணம் இலுமினாட்டிகள் என்பதான (சதித்திட்ட கோட்பாடு) காணொளிகளையும் தடைசெய்துள்ளதுடன் யூரியூப்பில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது.
Category: தொழில்நுட்பம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்