சம்சுங் நிறுவனத்தின் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூன்வரை இதன் விற்பனை ஆரம்பிக்காது. தற்போது சர்வதேச சந்தையில் கேலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போனை சம்சுங் நிறுவம் அறிமுகம் செய்துள்ளது.
புதிய கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போனில் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஸ்கீன், இன் டிஸ்பிளே கைரேகை சென்சார், 4 ஜிபி ராம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ரோய்டு 10 மற்றும் ஒன் யுஜ 2.0 வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கமரா, 8 எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 25 எம்பி செல்ஃபி கமரா வழங்கப்பட்டுள்ளது. 3டி கிளாஸ்டிக் வொடி கொண்டிருக்கும் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போனில் 3500 எம்ஏஹெச் பட்டரி, 15 வோட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Category: தொழில்நுட்பம், புதிது
Tags: