Thursday 23rd of May 2024 02:17:29 PM GMT

LANGUAGE - TAMIL
சனிக்கிழமை - 11.04.2020
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 11.04.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 11.04.2020


இன்று! விகாரி வருடம், பங்குனி மாதம் 29ம் திகதி, ஷாபான் 16ம் திகதி, 11.4.2020 சனிக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி நள்ளிரவு 12:41 வரை, அதன்பின் பஞ்சமி திதி, அனுஷம் நட்சத்திரம் நள்ளிரவு 1:24 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை சூலம் : கிழக்கு

• பரிகாரம் : தயிர் • சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி • பொது: சங்கடஹர சதுர்த்தி

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி

கன்னி: துணிச்சலாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தள்ளிப்போன காரியங்கள் உடனே முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சண்டை சச் சரவு வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் புது முயற்சியை தவிர்க்கவும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்கக்கூடும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

மகரம்

மகரம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் உடனே முடியும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். சிறப்பான நாள்.

கும்பம்

கும்பம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். நம்பிக்கைக்குரிய ஒருவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும்; வரவேண்டிய பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். மனசாட்சிபடி செயல்பட வேண்டிய நாள்


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE