Monday 27th of January 2025 09:35:33 PM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 13.04.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 13.04.2020


இன்று! விகாரி வருடம், பங்குனி மாதம் 31ம் திகதி, ஷாபான் 18ம் திகதி, 13.4.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி இரவு 10:24 வரை, அதன்பின் சப்தமி திதி, மூலம் நட்சத்திரம் நள்ளிரவு 12:34 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. சூலம் : கிழக்கு

• பரிகாரம் : தயிர் • சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி. • பொது சஷ்டி விரதம், முருகன் வழிபாடு

மேஷம்

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். புதிய சிந்தனைகள் தோன்றும்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும் . உற்சாகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுவேலை அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கன்னி

கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டிமுன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத் தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுகிட்டும். தேவை கள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறு சிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். நெருங்கியவர்களிடம் மனக்குறைகளை கூறி ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக இருங்கள். பொறுமைத்தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சனைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதார்த்தமாக பேசி கவருவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகளில் ஒன்று தீரும். உங்களால் பயனடைந் தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இன்பம் பெறும் நாள்.

மீனம்

மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE