Friday 19th of April 2024 06:21:01 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 14.04.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 14.04.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 1ம் திகதி, ஷாபான் 19ம் திகதி, 14.4.2020 செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி இரவு 9:58 வரை, அதன்பின் அஷ்டமி திதி, பூராடம் நட்சத்திரம் நள்ளிரவு 12:51 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. சூலம் : வடக்கு

பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம் பொது தமிழ்ப்புத்தாண்டு, முருகன் வழிபாடு.

மேஷம்

மேஷம்: இதுவரை இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி மனதில் ஒரு தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதிய சிந்தனைகள் தோன்றும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தி யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். உத்தி யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: கடினமான காரியங் களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம்

கடகம்: இன்றைய தினம் சமயோ சிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள் வீர்கள். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்

சிம்மம்

சிம்மம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளை களின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வாடிக் கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

கன்னி: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலை களையும் சேர்த்து முடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்தது நிறைவேறும் நாள்

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன இறுக்கங் கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப் போது கோபப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

மகரம்

மகரம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். எதிர்பாராத பயண செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வியாபா ரத்தில் வாடிக்கையா ளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மீனம்

மீனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிரபலங்கள் உதவு வார்கள். ஆன்மிக நாட்டம் அதி கரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதித்து காட்டும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE