Wednesday 24th of April 2024 07:22:44 PM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 16.04.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 16.04.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 3ம் திகதி, ஷாபான் 21ம் திகதி, 16.4.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, நவமி திதி இரவு 10:32 வரை, அதன்பின் தசமி திதி, திருவோணம் நட்சத்திரம் நள்ளிரவு 2:50 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:34 மணி வரை, சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. சூலம் : தெற்கு

• பரிகாரம் : தைலம் • சந்திராஷ்டமம் : புனர்பூசம் • பொது திருவோண விரதம், பெருமாள் வழிபாடு.

font color="blue">மேஷம்

மேஷம்: கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள் உறவினர் நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

font color="blue">ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். பழைய பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

font color="blue">மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நன்றி மறந்த சிலரை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

font color="blue">கடகம்

கடகம்: சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்துமுடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

font color="blue">சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

font color="blue">கன்னி

கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதுதொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

font color="blue">துலாம்

துலாம்: பால்ய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

font color="blue">விருச்சிகம்

விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அரசால் அனு கூலம் உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

font color="blue">தனுசு

தனுசு: இதுவரை இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

font color="blue">மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தம் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

font color="blue">கும்பம்

கும்பம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் இழப்பு ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

font color="blue">மீனம்

மீனம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகளை ஏற்பீர்கள். சிறப்பான நாள்


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE