Sunday 28th of May 2023 10:32:15 PM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 24.04.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 24.04.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 11ம் திகதி, ஷாபான் 29ம் திகதி, 24.4.2020 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி காலை 10:20 வரை, அதன்பின் துவிதியை திதி, பரணி நட்சத்திரம் மாலை 6:42 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. சூலம் : மேற்கு

• பரிகாரம் : வெல்லம் • சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி • பொது: சந்திர தரிசனம், சாய்பாபா ஸித்திதினம்

மேஷம்

மேஷம்: போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளால் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். வீட்டில் சிறிய அளவில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள். சான்றோர்களின் ஆசி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

ரிஷபம்

ரிஷபம்: திடீர் நன்மைகள் ஏற்படும். தந்தையுடன் இணக்கம் அதிகரிக்கும். விலகி நின்ற உறவினர்கள் விரும்பி வந்து சொந்தம் பாராட்டுவார்கள். மேலதிகாரியிடம் அனுசரித்து போவது நல்லது. நியாயமான, நேர்மையான செயல்களால் உயர்ந்து நிற்பீர்கள்.

மிதுனம்

மிதுனம் : பெண்களுக்கு தொட்ட செயல்கள் எல்லாம் துலங்கும். வியாபாரிகளும் அலுவலகவாசிகளும் புதிய பணியாளர்களின் ஒத்துழைப்பால் பணியாற்றி வெற்றிகளைக் குவிப்பீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த இடத்துக்கு மாறும் சூழல் ஏற்படும்.

கடகம்

கடகம்: ஒரே சமயத்தில் இரண்டு மூன்று பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் இப்போதைக்கு கிடைக்காது. சம்பள பாக்கிகள் வந்து சேரும். புதுவிதமான நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அலுவலகத்தில் பாராட்டுப் பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்மம் : சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பூர்வ சொத்துகள் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் சிலர் உங்களுக்கு எதிராகத் திரும்பலாம். எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாகும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி

கன்னி: முன்னர் செய்த தவறுகளை எண்ணி கவலை கொள்வீர்கள். தகுந்த ஆதாரம் இல்லாமல் எவருக்கும் கடன் தர வேண்டாம். உயர் கல்வி, உத்தியோகம் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். உணவுக் கட்டுப்பாடு தேவை.

துலாம்

துலாம்: கர்ப்பிணிகள் கவனமாக நடந்து கொள்வது நல்லது. தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பதால் மன உளைச்சலை தடுக்கலாம். கணவன் மனைவி இடையே வீண் சந்தேகங்கள் வேண்டாம். கடந்த காலத்தில் உங்களை தூற்றியவர்கள் போற்றுவார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். மன அமைதியின்மை, முன்கோபம் போன்றவை அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் கவனம் தேவைப்படும். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமாக பயில்வர்.

தனுசு

தனுசு: பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். உறவினர்களிடம் அதிகம் உரிமை பாராட்ட வேண்டாம். சொந்தமாக வீடு வாங்கும் கனவு நிறைவேறும். உடல் நலனில் கவனம் தேவை. தாய்மாமன் வகையில் ஆதாயங்கள் வரக்கூடும்.

மகரம்

மகரம்: சான்றோர்களின் ஆசி கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழக்க வேண்டாம். சகோதர, சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தந்தை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும்.

கும்பம்

கும்பம்: சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். ஆனாலும் அது மகிழ்ச்சி தரும். பல சவால்களைச் சந்தித்தாலும் தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் திறமைகளை கண்டு சிலர் பொறாமை கொள்வர். கடன் பிரச்னைகள் தீரும்.

மீனம்

மீனம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாகும். மேலதிகாரிகள் முக்கிய விவகாரங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE