Saturday 24th of February 2024 06:16:52 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 09.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 09.05.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 26ம் திகதி, ரம்ஜான் 15ம் திகதி, 9.5.2020 சனிக்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி பகல் 1:27 வரை, அதன்பின் திரிதியை, அனுஷம் நட்சத்திரம் காலை 9:22 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. சூலம் : கிழக்கு

• பரிகாரம் : தயிர் • சந்திராஷ்டமம் : பரணி • பொது: பெருமாள், அனுமன், சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம்

மேஷம்: உங்களைக் கண்டு சகபணியாளர்கள் பொறாமை கொள்வர். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொட்டது துலங்கும். பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டுப் புதிய வாகனம் வாங்குவீர்கள். வீண் வாக்குவாதத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்ப எதிர்காலத்திற்கு தேவையான முயற்சிகளை செய்வீர்கள். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. கலைஞர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். உடல் நிலையில் சற்று சிரமங்கள் ஏற்படக்கூடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்

மிதுனம்

மிதுனம் : சகபணியாளர்களின் ஒத்துழைப்பால் மனம் மகிழ்வீர்கள். மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பலவிஷயங்களை கற்றுக் கொள்வர். வியாபாரிகள் நஷ்டத்தைச் சரிசெய்வர். பெண்களின் புத்திசாலித்தனத்தால் உறவினர் மத்தியில் கணவரின் மரியாதை

கடகம்

கடகம்: கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பணியாளர்களுக்குப் பணவரவு தாராளமாக இருக்கும். பொதுநல நோக்குடன் செயல்பட்டாலும் சிலரால் விமர்சிக்கப்படுவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.

சிம்மம்

சிம்மம் : புத்தசாலித்தனத்துடன் நடந்து கொள்வீர்கள். கலைத் துறையினருக்கு நீண்ட நாள் கனவு நிறைவேறும். பிள்ளைகளுடன் வீண் வாக்குவாதங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. உத்யோகத்தில் உடன் வேலைபார்ப்பவர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும்.

கன்னி

கன்னி: சமுதாயத்துக்கு பல உதவிகளை செய்து பாராட்டைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இருந்து வந்த நீண்டகாலத் தடைகள் ஒரு வழியாக அகலும். பேச்சில் நிதானம் தேவை. மகன் அல்லது மகள் வாழ்வில் மகிழ்ச்சிகரமான திருப்பம் ஏற்படும்.

துலாம்

துலாம்: தொழிலில் இருந்த எதிரிகளை வெல்வீர்கள். மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெண்களுக்கு தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களின் உதவியைப் பெறுவீர்கள். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

விருச்சிகம்

விருச்சிகம்: கோபத்தைக் கட்டுப்படுத்தி எல்லா இடங்களிலும் நற்பெயர் எடுப்பீர்கள். உறவினரின் உதவியால் பணப் பிரச்னைகள் குறையும். வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் புதிய சாதனைகளை நிகழ்த்துவர். மாணவர்களுக்கு மனதில் உற்சாகம் உண்டாகும்.

தனுசு

தனுசு: பிள்ளைகளின் எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு நீண்ட நாளாக இழுபறியாக இருந்த விஷயங்கள் சிறப்பாக முடிவடையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற தகுந்த அங்கீகாரத்தை

மகரம்

மகரம்: வாழ்வில் முன்னேற அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் வேலையாட்களின் சிறப்பான செயலால் வெற்றி காண்பீர்கள். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள்.

கும்பம்

கும்பம்: வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் தேங்கியிருந்த சரக்குகளை விற்கும் வாய்ப்பு உருவாகும். பணியிடத்தில் பல சாதனைகளை செய்து பாராட்டைப் பெறுவீர்கள். நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.

மீனம்

மீனம்: பணியாளர்கள் வெகுகாலம் எதிர்பாரத்த சம்பள உயர்வைப் பெறுவர். அரசாங்கத்தால் ஆதாயம் அடைவீர்கள். எதிரிகளின் தொல்லைகள் அகலும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சமுதாயத்தில் சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE