Monday 24th of June 2024 09:07:49 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 10.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 10.05.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 27ம் திகதி, ரம்ஜான் 16ம் திகதி, 10.5.2020 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி பகல் 12:04 வரை, அதன்பின் சதுர்த்தி திதி, கேட்டை நட்சத்திரம் காலை 8:40 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம், மரண - அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் : மேற்கு • பரிகாரம் : வெல்லம் • சந்திராஷ்டமம் : கார்த்திகை • பொது: சங்கடஹர சதுர்த்தி, விநாயகர், சூரியபகவான் வழிபாடு.

மேஷம் மேஷம்: மனஉறுதியுடன் செயலாற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் கணிசமாக உயரும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.

ரிஷபம் ரிஷபம்: பணியாளர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சகோதர சகோதரிகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். முன்பைவிட உடல் ஆரோக்கியம் மேம்படும். அவசரத் தேவைக்கு சேமிப்பு பணம் பயன்படும்.

மிதுனம் மிதுனம் : விசா தொடர்பான பிரச்னைகள் தீர்வுக்கு வரும். வெகுநாள் தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் எல்லாம் ஒவ்வொன்றாக நடைபெறும். கூடுதல் முயற்சியால் பணியிடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். வாகன வகையில் சிறிய செலவுகள் உண்டாகும்.

கடகம் கடகம்: சொந்த தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பர். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிலவும். மாணவர்கள் உழைப்பின் பலனை அடைவர். அலுவலக சம்பந்தமான பேச்சுவார்த்தையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

சிம்மம் சிம்மம் : உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். அலுவலகத்தில் சகஊழியர்களுடன் மனம் விட்டுப் பேசினால் எல்லாப் பிரச்னைகளும் அகலும். வியாரிகளுக்கு சற்று அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி கன்னி: பணியாளர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில், வியாபாரத்தில் கடுமையான அலைச்சலுக்குப் பிறகே லாபம் இருக்கும். மாணவர்கள் இணையதளம் வாயிலாக பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வர்.

துலாம் துலாம்: உயர்கல்வி கற்க விரும்புவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். பணியாளர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.

விருச்சிகம் விருச்சிகம்: நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளுக்கு தேவையான வசதி வாய்ப்பை ஏற்படுத்தி தருவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும்.

தனுசு தனுசு: கணவன் மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பொருளாதாரம் செழித்து வளரும்.

மகரம் மகரம்: மாணவர்கள் எதிர்பாராத நன்மைகளை கிடைக்கப் பெறுவீர்கள். நெருங்கிய உறவினர் வீட்டில் பலகாலம் எதிர்பாரத்த சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறிய தடைகளுக்குப் பிறகு நற்செய்தி கிடைக்கும்.

கும்பம் கும்பம்: குழந்தைகளுக்கான கல்வி செலவுகள் சற்று கூடுதலாக ஆனாலும் மனநிம்மதி பெறுவீர்கள். வங்கிக் கடனுக்குரிய வட்டித் தொகையை செலுத்துவது நல்லது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். கடந்த காலத்தில் உங்களைத் தூற்றியவர்கள் போற்றுவார்கள்.

மீனம் மீனம்: மனைவி வழி உறவினர் வகையில் ஆதாயம் உண்டு. அழகு சாதன வியாபாரிகளுக்குப் பொருளாதாரத்தில் ஏற்றம் இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ற சம்பளமும் இருக்கும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE