ஏழு வாரங்களுக்கு பின்னர் இன்று ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு பங்குச் சந்தை வியாபாரம் அதிக பங்கு விலைச் சரிவு காரணமாக 38 வினாடிகளில் முடிவுறுத்தப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ம் திகதி பங்குப் பரிவர்த்தனைகள் யாவும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் செயற்றிட்டத்தின் கீழ் இன்று காலை 11 மணிக்கு பங்குச்சந்தை திறக்கப்பட்டது.
எனினும் பங்கு பரிவர்த்தனை தொடங்கியதும் பங்குகளுக்கான கேள்வி இல்லாததால் கடும் விலைச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆரம்பித்த 38 ஆவது விநாடியிலேயே பரிவர்த்தனை நிறுத்தப்பட்டது.
Category: வணிகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு